சீனாவுக்கு கடத்தப்பட இருந்த 3.5 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்

சீனாவுக்கு கடத்தப்பட இருந்த 3.5 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்

1 mins read

புதுக்கோட்டை: சீனாவுக்கு கடத்த திட்டமிட்டிருந்த 3.5 டன் செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், இது தொடர்பாக சிலருக்கு வலைவீசி உள்ளனர். நேற்று முன்தினம் புதுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கைமீண்டான் கிராமத்தில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அக்கிராமத்தில் இருந்த கிடங்கில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் இலங்கைக்கு கடத்த வைத்திருந்த 10 மூட்டை பீடி தயாரிக்கும் இலைகளையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.