தமிழ்நாட்டில் சாலை விபத்து கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, கடந்த 2015ஆம் ஆண்டில் இந்தியா விலேயே அதிக சாலை விபத் துகள் நிகழ்ந்த மாநிலம் என்ற மோசமான பெயரை தமிழகம் பெற்றது. சாலை விபத்துகளில் பெரும்பாலானவை அரசுப் போக்குவரத்துக் கழக பேருந் துகளால் நிகழ்ந்தவை என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது. போக்குவரத்துக் கழக பேருந் துகளில் கிட்டத்தட்ட 63% அல்லது 17,000 பேருந்துகள் சேதமுற்று சாலையில் ஓடும் தகுதியை இழந்து பல ஆண்டு கள் ஆவதாக தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக ஊடகங் களிடம் கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற் சங்கமான ஏஐடியுசி பொதுச் செயலாளர் ஜெ.லட்சு மணன் கூறுகையில், "பேருந்து சேவை நிபுணர்களின் பரிந் துரைப்படி ஒரு பேருந்தை அதிகபட்சம் 8 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை ஓட்டலாம் அல்லது ஆறு ஆண்டுகள் வரை பயன்படுத் தலாம்.

