இமாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த மோசமான நிலச்சரிவில் சிக்கி எட்டுப் பேர் மாண்டுவிட்டனர். மாண்டி - பதான் கோட் தேசிய நெடுஞ்சாலை அருகே ஏற்பட்ட நிலச்சரிவின் இடிபாடுகளில் 45 பேர் சிக்கி இருக்கலாம் என அஞ் சப்படுகிறது. அதனால் மரண எண்ணிக்கை 50க்கு மேல் அதிகரிக்கக்கூடும் என இமாச்சலப் பிரதேச போக்குவரத்து அமைச்சர் ஜி.எஸ். பாலாஜி தெரிவித்தார். சேவையில் ஈடுபட்டு இருந்த மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள் இரண்டு நிலச்சரிவில் சிக்கி உருண்டு விழுந்தன. கிட்டத்தட்ட 800 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் அவ்விரண்டு பேருந்து களும் விழுந்துவிட்டதாகவும் அவற்றை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதி காரிகள் தெரிவித்தனர்.
நேற்று அதிகாலை 1.30 மணி யளவில் திடீரெனக் கொட்டிய கனமழையைத் தொடர்ந்து நிலச் சரிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பேருந்துகள் மணாலியிலிருந்து காத்ராவுக்கும் சம்பாவுக்கும் சேவையாற்றிக்கொண்டிருந்த வேளையில் நிலச்சரிவில் சிக்கின. தேநீர் இடைவேளைக்காக கோட் ருபி என்னும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தபோது சாலை ஓரம் சரியத் தொடங்கி பின்னர் சாலை முழுவதும் உடைந்து நொறுங்கியபோது பேருந்துகள் சரிந்து விழுந்தன. இப்பகுதி சிம்லாவிலிருந்து சுமார் 220 கிலோ மீட்டர் தொலை வில் உள்ளது. ஒரு பேருந்தில் 8 பயணிகளும் மற்றொன்றில் 47 பேரும் இருந்த தாகச் சொல்லப்பட்டது. இவர்களில் நேற்று மாலை வரை எட்டு பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் அந்த எண்ணிக்கையில் அடக்கம். உயிருடன் மீட்கப்பட்ட ஐந்து பேர் மாண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பள்ளத்தில் விழுந்த பேருந்து களில் ஒன்றின் சுவடுகூட காணப் படவில்லை. அது என்னவாயிற்று என்று நேற்று இரவு வரை தகவல் இல்லை. அதனால் அதில் பயணம் செய்தவர்கள் புதையுண்டு மாண்டி ருக்கலாம் என அதிகாரிகள் கூறி னர். ராணுவமும் தேசிய பேரிடர் மீட்புப் படையும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டன. நிலச்சரிவால் சேதமுற்ற பகுதி களில் மீட்புப் பணிகளைத் தொடரு வதில் சிரமம் ஏற்பட்டதாகத் தெரி விக்கப்பட்டது. மற்றொரு பேருந்தின் நொறுங் கிய பாகங்கள் ஜம்மு நகர் அருகே காத்ரா என்னுமிடத்தில் மீட்கப்பட் டன. சம்பவ இடத்துக்கு மாநில முதல்வர் வீரபத்ர சிங் விரைந்து சென்று மீட்புப் பணிகளைப் பார்வை யிட்டார். நிலச்சரிவில் மாண்டோரின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமது ஆழ்ந்த அனுதா பங்களைத் தெரிவித்துள்ளார்.
பேருந்து ஒன்றின் நொறுங்கிய பாகங்கள் மீட்கப்பட்டபோது அவற்றினுள் சிக்கியிருந்தவர் கள் தங்களது உறவினர்களா என்று பலரும் ஓடிச் சென்று பார்த்தனர். நேற்று மாலை வரை எட்டு பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். படம்: ஏஎஃப்பி

