சென்னை: தமிழகம் முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், திறமை யான இளைஞர்கள் இருந்தும் கூட தொழில் முதலீட்டார்கள் முதலீடு செய்வது குறித்து யோசிப்பதாக மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித் துள்ளார். சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், தற்போது தமிழகத்தை நோக்கி வரும் முதலீடுகள் வேறு மாநிலங்களுக்குச் செல்வதாக கவலை தெரிவித்தார். தொழில் முதலீடுகள் நாட்டின் எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் நல்லதுதான் என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்துக்கு இருக்கின்ற வாய்ப்புகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் அரசு அதற்கு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
"தமிழகத்திற்கு முதலீட்டாளர் கள் அதிகம் வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த விஷயத் தில் தமிழக அரசுக்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளது. "இயற்கையாகவே அமையக் கூடிய வாய்ப்புகளை நாம் விட்டு விடக்கூடாது," என்றார் நிர்மலா சீதாராமன்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் படம்: இணையம்