சென்னை: அதிமுகவின் இரு அணிகள் இணைவது தொடர்பில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், டிடிவி தினகரன் நிதானமில்லாமல் பேசி வருவதாகக் குற்றம்சாட்டினார். அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக, பல கட்டங்களில் பேச்சு நடத்தப்பட்டதாகக் குறிப் பிட்ட அவர், அம்முயற்சி தற்போது செயல் வடிவம் பெற்றுள்ளதாகக் கூறினார். இதையடுத்து இணைப்பு முயற்சி இறுதி வடிவம் பெற உள்ளதாகவும் ஜெயகுமார் தெரி வித்தார். "டெல்லியில் முன்னாள் முதல் வர் பன்னீர்செல்வம், பிரதமரை சந்தித்த பின் சாதகமான பதிலை தெரிவித்துள்ளார். எனவே, கட்சி ஒன்றுபடும் என்ற நம்பிக்கை உள்ளது. "ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் எந்த விதத்திலும் உடையக் கூடாது என்ற அக்கறை யில் பிரதமர் கருத்து கூறினால் அதில் தவறில்லை. அதற்கு உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது," என்றார் ஜெயகுமார்.
முதல்வர் குறித்து தினகரன் கூறிய கருத்துகள் கண்டனத் திற்குரியது என்று குறிப்பிட்ட அவர், நடப்பு ஆட்சியைக் கவிழ்ப்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்றார். "ஆட்சி உட்பட எல்லா நல னையும் அனுபவித்து, மற்றவர்கள் மீது சேற்றை வாரி வீசுவது, அவர்கள் மீதே சேற்றை வீசிக் கொள்வது போன்றது. தினகரன் நிதானமில்லாமல் பேசியுள்ளார். அவர் பேசியது, பக்குவப்பட்ட அரசியல்வாதியின் பேச்சல்ல. "தினகரனை நீக்கும் தீர்மா னத்தைப் படித்துப் பார்த்த பின்னர் தான், அனைவரும் அதில் கையெழுத்திட்டனர். அதில், தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுமையாக நீக்குவதாகக் கூறி யுள்ளோம்," என்று ஜெயகுமார் தெளிவுபடுத்தினார். தினகரனின் காழ்ப்புணர்ச் சியை அதிமுகவினர் புரிந்து கொள்வர் என்றும் ஜெயலலிதா இருந்த இடத்தில் வேறு யாரையும் வைத்து அழகு பார்க்க விரும்ப வில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இருதரப்புக்கும் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் முற்றி வருகிறது.

