நாட்டின் 71ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டையில் முதல்வர் பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அப்துல் கலாம், கல்பனா சாவ்லா பெயரில் வழங்கப்படும் விருதுகளை அவர் வழங்கினார். முன்னதாக முப்படைகள் சார்பில் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், காவல்துறை உயரதிகாரிகள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். படம்: சதீஷ்
சுதந்திர தினம்: அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர்
1 mins read
-

