சென்னை: சசிகலா மட்டும் இல்லாவிட்டால் நடப்பு அதிமுக ஆட்சி நிலைத்திருக்குமா என் பதை ஆட்சியாளர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும் என அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா விற்கு வரத் தயாராக இருந்த எம்எல்ஏக்களைக் கடத்திச் சென்று ஒளித்து வைத்தவர்கள் ஒழிக்கப்படுவார்கள் என ஆவேசத்துடன் குறிப்பிட்டார். இன்று ஆட்சியில் இருப்பவர் களை யார் கொண்டு வந்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும் என்று குறிப்பிட்ட தினகரன், கூவத்தூரில் எம்எல்ஏக்களை ஒன்று சேர்த்திருக்காவிட்டால் இந்த ஆட்சி இப்போது நடக்குமா எனக் கேள்வி எழுப்பினார். அதிமுகவில் தனக்கு செல் வாக்கு உள்ளது என்பதை நிரூ பிக்கும் வகையில் மதுரையை அடுத்த மேலூரில் தினகரன் நடத்திய இந்த எம்ஜிஆர் நூற் றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் 14 எம்எல்ஏக்கள் மற்றும் 5 எம்பிக்கள் பங்கேற்றனர்.
"ஜெயலலிதாவின் மறை விற்குப் பிறகு சசிகலா மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத் தில் தொடர வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டார். அவர் நினைத்திருந்தால் டிசம்பர் 5ஆம் தேதியே சட்டப்பேரவை உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார். "தமிழகத்தின் நலன் கருதி அவர் வேறொருவரை முதல்வ ராகக் கைகாட்டினார். அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட சசிகலா முதல்வராகப் பதவி யேற்க முடியாமல் போனது. அந்தச் சிரமமான சூழலிலும் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என அவரால் சுட்டிக் கட்டப்பட்ட ஒருவர் முதல்வராக நியமிக்கப்பட்டார்," என்றார் தினகரன். சசிகலா நினைத்திருந்தால் தம்மையோ அல்லது தங்கள் குடும்பத்தில் ஒருவரையோ முதல் வராக ஆக்கியிருக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், தனது குடும்பத்தார் பதவிக்காக அலைய வில்லை என்றார்.

