அனைத்துத் துறையிலும் முன்னேறும் தமிழகம்: முதல்வர் பெருமிதம்

அனைத்துத் துறையிலும் முன்னேறும் தமிழகம்: முதல்வர் பெருமிதம்

1 mins read

சென்னை: விடுதலைப் போராட்ட தியாகிகளுக்காகப் பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி நேற்று சென்னை, கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்துப் பேசிய அவர், இந்தியாவில் முன்னோடி மாநிலமாகத் தமிழகம் திகழ்வதாகக் குறிப்பிட்டார். "அனைத்துத் துறைகளிலும் தமிழக அரசு வேகமாக முன்னேறி வருகிறது. முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். "பாகிஸ்தான் போரின் போது, தன் சொந்த நகைகளை அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் கொடுத்தவர் காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா," என்று தமது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார் முதல்வர் பழனிசாமி.