கரூர்: நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள் மூவர் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரி ழந்தனர். கரூரைச் சேர்ந்த 20 வயதான ராம்குமார், 21 வயதான முரளிதரன் இருவரும் பொறியியல் படித்து வந்தனர். நேற்று முன்தினம் நண்பர்கள் சிலருடன் இருவரும் நெரூர் அக்ரகாரம் பகுதி காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர். முரளிதரன், ராம் குமார் இருவரும் ஆற்றில் குளித்தபோது புதை மணலில் சிக்கினர். இதனைக் கண்ட அவரது நண்பர்கள் உதவி கேட்டு குரல் எழுப்பினர். அப்பகுதி இளையர்கள் சிலர் ஓடி வந்து புதை மணலில் சிக்கிய 2 பேரையும் மீட்கப் போராடினர். எனினும் இருவரையும் சடலமாகவே மீட்க முடிந்தது.
காவிரி ஆற்றில் குளித்தபோது புதை மணலில் சிக்கி 2 மாணவர்கள் பலி
1 mins read

