சென்னை: தனி மனித வாழ்க்கையில் ஒழுக்கமாக நடந்து கொள்ளாத கமல்ஹாசனுக்கு நல்ல ஆட்சியைக் குறைகூற எந்த அருகதையும் இல்லை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். நடிகர் கமல் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். நேற்று முன்தினம் முதல்வர் பழனி சாமி பதவி விலக வேண்டும் என் கிற ரீதியில் கருத்து தெரிவித் திருந்தார். இது குறித்து செய்தியாளர்க ளிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் நடிகர் கமல் தேவையில்லாமல் சிங்கத் துடன் மோதுவதாகத் தெரிவித்தார். "அதிமுகவினர் கமலின் நடவ டிக்கையைக் கவனித்துக்கொண்டு தான் வருகின்றனர். ஜெயலலிதா இறப்பின்போதும் கூட சரியான இரங்கல் அறிக்கையைத் தெரிவிக் காமல் கிண்டலான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
"இப்போது அதிமுக ஆட்சியைக் கேலி செய்யும் அளவில் பேசுகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக் கது. இதனை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்," என்றார் ராஜேந்திர பாலாஜி. முதல்வர் பழனிசாமி ஆட்சியில் கமல்ஹாசன் என்ன குறையைக் கண்டார் எனக் கேள்வி எழுப்பிய அவர், கமல்ஹாசனுக்கு தங்கள் மீது காழ்ப்புணர்ச்சி இருப்பதாகக் கூறினார். கமலின் செயல்பாடுகள் அவ ரது தகுதிக்கு அழகு சேர்க்காது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கிடையே, கமல்ஹாசன் வெறுமனே பேசிக்கொண்டிருக்கா மல், அரசியல் களத்திற்கு வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். ஊழலை எதிர்த்து ஒரு ஆர்ப் பாட்டம் நடத்தப்போவதாகக் கமல் அறிவித்தால் அதில் பங்கேற்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

