கோவை: இந்தியாவில் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக கோவை மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜே.கே.பாஸ்கரன் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் சாலை விபத்துகளில் தினமும் 400 பேர் உயிரிழப்பதாகவும் ஒவ்வொரு 3.6 நிமிடத்துக்கு ஒரு மனித உயிர் விபத்தில் பறிபோகிறது என்றும் கவலை தெரிவித்தார். "சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 17,666 பேர் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 15,642 பேர் உயிரிழந்துள்ளனர். "விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்பட்டால் விபத்துகளைத் தவிர்க்கலாம்," என்றார் பாஸ்கரன்.
3.6 நிமிடத்துக்கு ஒரு மனித உயிர் பலியாகிறது: அதிர்ச்சித் தகவல்
1 mins read

