போதைக்காக மாணவர்களுக்குத் தூக்க மாத்திரைகள் விற்றவர் கைது

போதைக்காக மாணவர்களுக்குத் தூக்க மாத்திரைகள் விற்றவர் கைது

1 mins read

மதுரை: கல்லூரி மாணவர்கள் வலி நிவாரணி, தூக்க மாத்திரை களைப் போதைக்குப் பயன்படுத்துவது மதுரை போலிசாருக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாணவர்களிடம் அதிக விலைக்கு இம்மாத்திரைகளைப் பெற்ற மருந்தாளுநரும் மாண வர்களில் ஒருவரும் கைதாகி உள்ளனர். அந்த மருந்தாளுநர் மொத்த மருந்து விநியோகிப்பாளர்களிடம் தூக்க மாத்திரைகளை அதிகளவில் வாங்கி அதை மாணவர்களிடம் இரட்டிப்பு விலைக்கு விற்றுள்ளார். அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.