மலேசியாவில் தவிக்கும் கணவர்: மீட்கக் கோரி மனைவி கண்ணீர் மனு

மலேசியாவில் தவிக்கும் கணவர்: மீட்கக் கோரி மனைவி கண்ணீர் மனு

1 mins read
1bcf7565-d70b-4604-8787-b44b2b5c59b3
-

சென்னை: மலேசியாவில் வேலை பார்க்கச் சென்ற கணவர் ஊர் திரும்ப முடியாமல் பரிதவிப்பதாக வும், அவரை மீட்கக் கோரியும் நெல்லையைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மனைவி சென்சா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன் ஒரு கடையில் வேலை பார்க்க மலேசியா சென்றுள்ளார் செல்வ குமார். இதற்காக முகவர் ஒருவ ரிடம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் சென்ற இடத்தில் இரவு பகலாக வேலை பார்க்க நேர்ந் துள்ளது. அவரைப் பணிக்கு அமர்த்தியவர்கள் சரியாக உணவு அளிக்காமல் அதிகம் வேலை வாங்கியுள்ளனர். மூட்டை தூக்கும் வேலை என்பதால் செல்வகுமாரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

அதற்குரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாததால், தாம் பணி யாற்றிய இடத்தில் இருந்து தப்பிய அவர், கடை உரிமையாளர்களுக்கு தெரியாமல் தமிழர் ஒருவரது வீட் டில் தங்கியுள்ளதாகக் கூறப்படு கிறது. தனக்கு நேர்ந்த அவலங் களை அவர் மனைவிக்கு அவ்வப் போது தெரிவித்து வந்துள்ளார். "அடிமையை விடவும் மோசமாக நடத்தியதால் என் கணவர் அந்த இடத்தில் இருந்து தப்பி வெளியேறி விட்டார். அவருடைய கடப்பிதழ் கடை உரிமையாளரிடம் சிக்கிவிட் டது. அதனால் தமிழகத்துக்கு வரமுடியாத நிலை இருக்கிறது. "அவரை மீட்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தியே ஆட்சியரை சந் தித்து மனு அளித்தேன்," என செய்தியாளர்களிடம் சென்சா தெரிவித்தார்.

செல்வகுமார். படம்: ஊடகம்