பெங்களூரு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் எங்கள் ஆதரவாளர்கள் மறைந்துள்ளனர் என்று அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களைக் கொண்டு விரை வில் அறுவை சிகிச்சை நடக்கும் என்று தினகரன் கூறியுள்ளார். எடப்பாடி அணியில் உள்ள சில எம்எல்ஏக்கள் எங்களுடைய ஆதரவாளர்கள் என்று அவர் தெரிவித்தார். முன்னதாக பெங்களூரு மத்திய சிறையில் உள்ள அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலர் சசிகலாவை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "பொதுச் செயலர் சசிகலா மீதான அவப் பெயர் நீங்கும் என்பதற்காகவே நீதி விசாரணைக்குத் தயார் எனக் கூறினேன்," என்றார். "எங்களுக்கு ஆதரவான சில எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனி சாமி அணியில் 'ஸ்லீப்பர் செல்' போல் செயல்படுகின்றனர். "அணிகள் இணைப்பு, நினை விடம் அறிவிப்பால் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை," என்றும் அவர் கூறினார். "ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக்கும் விவகாரத் தில் அவசர கதியில் செயல்பட்டு உள்ளனர். பதவியைக் காப்பாற்றிக் கொள்ள சிலர் வியாபார நோக் கோடு அறிவிப்புகளை வெளி யிட்டுள்ளனர்.
"அவசரகதியில் அணிகள் இணைந்தால் அதன் ஆயுட்காலம் நீடிக்காது. தற்போதைய நில வரங்கள் குறித்து சசிகலாவுடன் பேசினேன். சசிகலா சில ஆலோ சனைகளை வழங்கினார். கட்சி யின் நன்மைக்காக அடுத்ததாக சில அறுவை சிகிச்சைகள் நடக் கும்," என்று தினகரன் கூறினார்.

