கிருஷ்ணகிரி: பணம் தொடர்பான தகராற்றில் இரு நண்பர்களை வெட்டிக் கொன்ற ஐந்து பேரை கிருஷ்ணகிரி போலிசார் கைது செய்துள்ளனர். "ஓசூரை அடுத்துள்ள கொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் (வயது 23), பரத் (23) ஆகிய இருவரும் மேலும் 5 நண்பர்களுடன் சேர்ந்து நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு ஏழு பேரும் சேர்ந்து கொத்தப்பள்ளியில் உள்ள குட்டை அருகே ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது மஞ்சுநாத், பரத் இருவருக்கும் மற்ற 5 நண்பர்களுடன் மோதல் மூண்டது. ஆவேசமடைந்த நண்பர்கள், இவர்கள் இருவரையும் கட்டிப் போட்டு அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் அங்கேயே பிணமாகினர். பின்னர் இருவரையும் குட்டையில் தூக்கி வீசிய ஐவரும் பாகலூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தள்ளனர். இந்தச் சம்பவம் காரணமாக கொத்தப்பள்ளி, அதன் சுற்றுப்புற கிராமங்களில் பரபரப்பு நிலவுகிறது.
பணத் தகராறு; இரு நண்பர்களை வெட்டிக் கொன்ற ஐவர் கைது
1 mins read

