அதிமுக அணிகள் இணைவது ஒன்றும் முக்கிய பிரச்சினை அல்ல: சீமான்

அதிமுக அணிகள் இணைவது ஒன்றும் முக்கிய பிரச்சினை அல்ல: சீமான்

2 mins read
989f9d41-6e7d-4241-866a-0ad5bbbb31eb
-

கும்பகோணம்: அதிமுகவின் மூன்று அணிகள் இணைவது குறித்து பரபரப்பாகப் பேசுவது தமக்கு வெறுப்பை ஏற்படுத்தி உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது அருவருப்பானதொரு போக்கு என்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தின் நதிநீர் உரிமை களை அண்டை மாநிலங்கள் பறித்து வருவதாகக் கவலை தெரிவித்த அவர், தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்து விவாதிப் பது அவசியம் என்றார். "மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை எதிர்த்து தமிழகத்தின் பெரும்பாலான கட்சி கள் போராடி வருகின்றன. இத்த கைய சூழலில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட ஒப்புதல் கொடுத்திருப்பதாக வெளியான செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதைப் பற்றி யாரும் பேசவில்லை," என்றார் சீமான். பவானி ஆற்றில் கேரள அரசு வரிசையாகத் தடுப்பு அணை களைக் கட்டி வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை அண்டை மாநிலங்கள் பறித்து, தமிழகத்தைப் பாலைவனமாக்க முயற்சி செய்வ தாகச் சாடினார். "இதிலிருந்து தமிழகத்தை மீட்பது குறித்தோ, காப்பது குறித்தோ தமிழக அரசிடம் சிந் தனை அல்லது செயல்வடிவம் இல்லை. இந்த நிலையில் அணிகள் இணைந்தால் என்ன, இணையாவிட்டால் என்ன? "இதை ஒரு பெரிய பிரச்சி னையாகக் கருதி கடந்த 3 மாதங் களாகப் பெரியளவில் பலரால் பேசப்பட்டு வருகிறது. இதை நான் வெறுக்கிறேன்," என்று கொந்த ளிப்புடன் தெரிவித்தார் சீமான்.

மக்களின் உரிமைகளைப் பாது காக்கும் வகையிலேயே அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், மாறாக உரிமைகளைப் பறிக்கக்கூடாது என வலியுறுத்தினார். "இதுபோன்ற ஒரு சூழ்நிலை யில்தான் கர்நாடக அரசு மேகதாது வில் அணை கட்டி வருகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். ஆனால் தமிழக அரசோ அதனை மறந்துவிட்டு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. "தமிழகத்துக்குப் பாதிப்பு இல் லாமல் கர்நாடக அரசு மேக தாதுவில் அணையைக் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசின் வழக் கறிஞர் கூறியுள்ளார். இது தமிழக மக்களுக்கு பழனிசாமி அரசு செய்துள்ள மிகப் பெரிய துரோகம் ஆகும். இது உயிரை எடுக்காமல் கழுத்தை அறுத்துக்கொள்ளுங்கள் என்பதற்குச் சமம்," என சீமான் மேலும் தெரிவித்தார். தற்போது முதல்வருக்குத் தெரி யாமலேயே சில விஷயங்கள் நடக் கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என்றும் சீமான் மேலும் கூறினார்.

சீமான். படம்: இணையம்