அதிகாரிகளின் அலட்சியத்தால் நேர்ந்த அவலம்; ரயில் தடம்புரண்டு 23 பயணிகள் மரணம்

அதிகாரிகளின் அலட்சியத்தால் நேர்ந்த அவலம்; ரயில் தடம்புரண்டு 23 பயணிகள் மரணம்

2 mins read
43b7c100-3554-4d25-a160-2cc23c86b1db
-

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் விரைவு ரயில் ஒன்றின் 14 பெட்டிகள் தடம் புரண்டதில் 23 பேர் பலியாகினர்; 97 பேர் காயம் அடைந்தனர். முஸாஃபர்நகரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கத்தௌலி என்னுமிடத்தில் நேற்று முன்தினம் மாலை 5.37 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்தது. தடம்புரண்ட வேகத்தில் பூரி= ஹரித்துவார் உத்கல் கலிங்கா விரைவு ரயிலின் சில பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி நின்றன. ஒரு பெட்டி தண்டவாளத்தை ஒட்டி இருந்த வீட்டின் மீதும் மற்றொரு பெட்டி ஒரு கல்லூரிச் சுவரின் மீதும் இடித்து நின்றன.

இதையடுத்து, நூற்றுக்கு மேற் பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை யினரும் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரும் மீட்புப் பணிகளுக் காக சம்பவ இடத்திற்கு அனுப்பப் பட்டனர். காயமடைந்த பயணிகள் 95 அவசர மருத்துவ வாகனங்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரி வித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தச் சம்பவம் தமக்கு மிகுந்த வலியைத் தருவதாகவும் குறிப்பிட்டார்.

உயிரிழந்தோரின் குடும்பங் களுக்கு ரூ.350,000, பலத்த காய மடைந்தவர்களுக்கு ரூ.50,000, லேசாக காயமுற்றோருக்கு 25,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார். அதுபோல, மாண்டோரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அறிவித்துள்ளார். மீட்புப் பணிகளை முடுக்கிவிட் டுள்ளதாகக் கூறிய திரு சுரேஷ் பிரபு, விபத்து பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருக்கிறார். இந்நிலையில், ரயில் பெட்டிகள் தடம்புரண்டதற்கு அதிகாரிகளின் பொறுப்பின்மையே காரணம் என கூறப்படுகிறது.

விபத்து நிகழ்ந்த தடத்தில் அதிகாரபூர்வமற்ற பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டு இருந்த தாகவும் அதுகுறித்து ரயில் ஓட்டுநருக்கு எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. விபத்துக்குள்ளானபோது ரயில் 106 கி.மீ. வேகத்தில் சென்றதாக வும் தகவல் அளிக்கப்பட்டிருந்தால் ரயில் 10=15 கி.மீ. வேகத்திலேயே இயக்கப்பட்டிருக்கும் என்றும் தெரி விக்கப்பட்டது.

உத்கல் விரைவு ரயில் விபத்தையடுத்து நேற்று மாலை 6 மணி வரை அந்தத் தடம் வழியாகச் செல்லவிருந்த ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன அல்லது வேறு வழியாகத் திருப்பிவிடப்பட்டன. படம்: ராய்ட்டர்ஸ்