தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் மாற்றம் நிகழ்ந்து உள்ளது. முதல்வராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம் பர் மாதம் மறைந்த பிறகு அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து மூன்று அணிகளாகப் பிரிந்தன. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் (ஓபிஎஸ்), டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் அந்த அணிகள் இயங்கி வந்தன. இவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கை விட்டு வந்தனர். அதிமுகவின் பெரும் பாலான எம்எல்ஏக்கள் எடப்பாடி அணியிலும் பத்து அல்லது பன்னி ரண்டு எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் வசமும் இருந்தனர். இந்நிலையில், எதிர்க்கட்சியான திமுக மீண்டும் ஒரு நம்பிக்கை யில்லாத் தீர்மனத்தை எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு எதி ராகக் கொண்டு வரப்போவதாகத் தெரிவித்திருந்தது. அதிமுக பிளவுபட்டுக் கிடக் கும் வாய்ப்பை திமுக பயன்படுத்தி னால் தங்களது பதவிக்கு ஆபத்து என்று பழனிசாமி அணியினர் கருதினர்.
மேலும் அதிமுகவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை ஒன்று பட்ட அதிமுகவுக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருப்பதால் உள் ளாட்சித் தேர்தலுக்குள் அந்தச் சின்னத்தைப் பெற்றாக வேண்டிய நிலை இரு அணிகளுக்கும் இருந் தது. எனவே அந்த இரு அணிகளும் இணையும் சூழ்நிலை ஏற்படுத்தப் பட்டது. இதன் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி இருப்பதாக எதிர்க்கட்சியினர் கூறியபோதிலும் அதற்கான ஆதாரத்தை அவர் களால் வெளிப்படுத்த இயல வில்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் நிலவும் மர்மம் குறித்து நீதி விசா ரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை ஏற்ற பழனிசாமி, அதுகுறித்த அரசாங்க அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டார்.
எல்லாவற்றுக்கும் ஒத்துக்கொண்ட பழனிசாமி, ஒரு முக்கிய நிபந்தனையை ஏற்பதில் காலம் தாழ்த்தி வந்தார். சசிகலாவை அதிமுகவிலிருந்து ஒரேயடியாக நீக்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. அதனால் நேற்றுக் காலை முதல் பிற்பகல் வரை இணைப்பு என்பது இழுபறியாக நீடித்தது. பழனிசாமியிடம் இந்த நிபந்தனை குறித்து அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, நாடாளுமன்ற உறுப் பினர் வைத்திலிங்கம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் ஓபிஎஸ்ஸை இம்மூவரும் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

