பொம்மைகளாக மாறிவிட்ட முதல்வர், அமைச்சர்களை மோடி ஆட்டுவிக்கிறார்: திருநாவுக்கரசர்

பொம்மைகளாக மாறிவிட்ட முதல்வர், அமைச்சர்களை மோடி ஆட்டுவிக்கிறார்: திருநாவுக்கரசர்

2 mins read
0a853bd9-a6e2-449b-8bff-6bb761efbd69
-

தஞ்சை: தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் பாஜவில் சேர தயாராக இருப்பதாக கூறப் படுவது வெறும் கற்பனை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திரு நாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், தங்கள் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பதற்காக அதிமுகவை பாஜக உடைத்ததாகக் குற்றம்சாட்டினார். "மத்திய மோடி அரசும், அமித் ஷா தலைமையில் உள்ள பாஜவும் சேர்ந்து அதிமுகவை உடைத்தன. எனினும் உடைந்த அணி, பலமாக இல்லை. எனவே தான் இரு அணிகளையும் மீண் டும் இணைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். "உடைத்தது அவர்கள் தான், இப்போது இணைக்க முயற்சி செய்வதும் அவர்கள்தான். முன்னதாக அதிபர், துணை அதிபர் தேர்தல்களில் அதிமுக சட்டப்பேரவை, நாடாளுன்ற உறுப்பினர்களை நன்கு பயன் படுத்திக் கொண்டனர்," என்றார் திருநாவுக்கரசர். தமிழக முதல்வர், அமைச்ச ர்கள், எல்லோரும் பொம்மைகளாக மாறிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது தமிழகத்தில் பொம்மலாட்டம் தான் நடக்கிறது என்றும், அதற்கான கயிறு மோடி மற்றும் அமித்ஷா கையில் உள்ளது என்றும் விமர்சித்தார்.

"அவர்கள் இருவரும் தான் பொம்மைகளை ஆட்டுவிக்கிறார் கள். அமித் ஷா தமிழகத்தில் 3 நாட்கள் அல்ல 30 மாதம் தங்கி னாலும் இங்கு பாஜவை பலப்படுத்த முடியாது. அக்கட்சி யால் தமிழகத்தில் வேரூன்ற இயலாது. "நீதிமன்றம் உத்தரவிட்டும் உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு இன்னும் நடத்தவில்லை. தேர்தலில் தோல்வி ஏற்படும் என்று பயத்தில் தான் இன்னும் தேர்தல் நடத்தாமல் பல்வேறு காரணங்களை கூறி அதிமுக அரசு தள்ளிப் போடுகிறது," என திருநாவுக்கரசர் மேலும் புகார்களை அடுக்கினார்.

திருநாவுக்கரசர் படம்: ஊடகம்