சென்னை: விமான ஓடுதளத்தில் கிடந்த மர்மப் பையால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அந்தப் பையைத் திறந்து பார்த்தபோது அதில் 16 கிலோ தங்கம் இருப்பது தெரிய வந்ததால் பரபரப்பு அடங்கியது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பல அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. அனைத்துப் பகுதிக ளிலும் கண்காணிப்புக் கேம ராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமான நிலைய நுழைவுப் பகுதி, பார்வையாளர்கள் பகுதி, சரக்குகள் கையாளப்படும் இடம், ஓடுதளம் என அனைத்தும் மத்திய சிறப்புப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ளது. குறிப்பாக விமான ஓடுதளப் பகுதியை எவரும் நெருங்கக்கூட இயலாது. அப்பகுதி 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் விமான ஓடுதளத்தில் மர்மப் பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. இதைக் கவனித்த பாதுகாப்புப் படையினர், உடனடியாக வெடி குண்டு நிபுணர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பையைக் கைப்பற்றி வெடிகுண்டு ஏதும் இருக்கிறதா எனச் சோதனையிட்ட னர். ஆனால் வெடிகுண்டுக்குப் பதிலாக அந்தப் பையில் தங்கக் கட்டிகளே இருந்தன. மொத்தம் 16.4 கிலோ தங்கம் இருந்ததாகவும் அதன் அனைத் துலகச் சந்தை மதிப்பு ரூ.4.6 கோடி என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து விமான நிலைய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆராயப் பட்டன. அப்போது, ஒரு கேமராவில் விமான நிலைய டிராலி ஓட்டுநரான குமார் என்பவர், அந்தப் பையை விமானத்தில் இருந்து இறக்கிய காட்சி பதிவாகி இருந்தது. அதிகாரிகளின் சோதனை யைத் தவிர்க்கும் திட்டத்துடன் அவர் அந்தப் பையை ஓடுதளத் திலேயே விட்டுச்சென்றுள்ளார். இதையடுத்து அவரை சுங்கத்துறை அதிகாரிகள் போலிசாரிடம் ஒப்ப டைத்தனர். அவருக்கு ஏதேனும் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என விசாரணை நடந்து வருகிறது.

