ஆதரவை விலக்கிக்கொண்ட 19 எம்எல்ஏக்கள்; தமிழகத்தில் அதிமுக ஆட்சி கவிழும் அபாயம்

ஆதரவை விலக்கிக்கொண்ட 19 எம்எல்ஏக்கள்; தமிழகத்தில் அதிமுக ஆட்சி கவிழும் அபாயம்

2 mins read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுகவில் ஏற்பட்ட பிளவால் தமிழகத்தில் நிலவி வந்த அரசியல் குழப்ப நிலைக்கு நேற்று முன்தினம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. ஆனால், அது முற்றுப்புள்ளி அல்ல, புதியதொரு பிரச்சினைக் கான, மாற்றத்திற்கான தொடக்கப் புள்ளி என்பதை அதிமுகவின் ஒரு பிரிவான டிடிவி தினகரன் அணியினரின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. சசிகலா ஆதரவுடன் முதல்வர் பதவியில் அமர்ந்தபோதும் அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றதும் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து, முன்னாள் முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் அணி, இப் போதைய முதல்வர் எடப்பாடி அணி, தினகரன் அணி என அதிமுக மூன்றாக உடைந்தது. இந்த நிலையில், ஓபிஎஸ்= இபிஎஸ் அணிகள் நேற்று முன் தினம் இணைந்தன. துணை முதல்வராகப் பொறுப்பேற்ற ஓபி எஸ்ஸிடம் நிதி, வீட்டு வசதி உள் ளிட்ட ஆறு துறைகளும் ஒப்படைக் கப்பட்டன. இந்த இணைப்பால் அதிர்ச்சி அடைந்த தினகரன் தரப்பினர், 'பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார்' என்ற அறிவிப்பால் மேலும் கொதிப் படைந்தனர்.

தொடர்ந்து, ஓபிஎஸ், இபிஎஸ் போலவே நேற்று முன்தினம் இரவு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் சென்று தியானத்தில் ஈடுபட்டு, அஞ்சலி செலுத்திவிட்டு வந்தனர். பின் மீண்டும் கூடி ஆலோசித்த அவர்கள், நேற்றுக் காலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந் தித்தனர். அப்போது, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான தமிழக அரசுக்குத் தங்கள் ஆதரவை விலக்கிக்கொள்வதாக' ஆளுநரிடம் தனித்தனியாகக் கடிதம் கொடுத்தனர். இதனால், இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 113ஆகக் குறைந்துள்ளது. கரு ணாஸ், தனியரசு, தமிமுன் அன் சாரி ஆகிய மூன்று கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித் தாலும் இபிஎஸ்ஸுக்குச் சட்ட மன்றத்தில் பெரும்பான்மை கிட் டாது.

ஏனெனில், பெரும்பான்மையை நிரூபித்து, ஆட்சியைத் தக்க வைக்க 117 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இதையடுத்து, தனது ஆதரவா ளர்களில் யாரேனும் இபிஎஸ் பக்கம் தாவிவிடலாம் என்று தின கரன் அச்சப்படுவதாகக் கூறப் படுகிறது. அதனால் முன்னர் கூவத்தூர் சொகுசு விடுதியில் எம்எல்ஏக்களை அடைத்து வைத் ததுபோல இம்முறையும் அவர் களைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணிக்க தினகரன் முடிவு செய்துள்ளாராம். இதற்கிடையே, தினகரன் ஆத ரவு எம்எல்ஏக்கள் அனைவரும் புதுச்சேரி -= கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள 'விண்ட் ஃபிளவர்' எனும் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'நம்பிக்கை வாக்கெடுப்பு' பெரும்பான்மையை இழந்துவிட்ட தால் உடனடியாக சட்டமன்றத் தைக் கூட்டவேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள் ளனர்.