முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வத்தையும் நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை கையில் எடுத்துள்ள அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகர னின் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள் ளனர். புதுச்சேரி அரியாங்குப்பம் அரு கிலுள்ள சின்ன வீராம்பட்டினம் கட லோரக் கிராமத்தில் 'தி விண்ட்ஃப்ள வர்' சொகுசு விடுதியில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த எம்எல்ஏக்களுக்கு நேற்று முன்தினம் இரவு வழங்குவதற்காக பிரியாணி, மீன் என அசைவ உணவு வகைகளுடன் விலையுயர்ந்த மது பான வகைகளும் கொண்டு செல்லப் பட்டதாக 'தினமலர்' தெரிவித் துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர் தலைமையிலான அதிமுகவினர் கட்சிக் கொடியேந்தி நேற்றுக் காலை சொகுசு விடுதியை நோக்கி ஊர் வலமாகச் சென்றனர். ஆனால் போலி சார் அவர்களைத் தடுத்து நிறுத் தினர். எனினும் தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு சென்ற அதிமு கவினர் தினகரனின் படங்களை காலணியால் அடித்ததோடு தீ வைத்துக் கொளுத்தினர். தங்கத் தமிழ்ச்செல்வனைத் தவிர 18 எம்எல்ஏக்களும் நேற்று முழுவதும் சொகுசு விடுதியை விட்டு வெளியே வரவில்லை.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசு விடுதி வாயில் அருகே போலிசார் அமைத்திருந்த தடுப்பு வேலி மீது ஏறி நின்ற ஓம்சக்தி சேகர், தினகரனைக் கடுமையாக விமர்சித்தார். படம்: இந்திய ஊடகம்

