காஷ்மீரில் பிச்சைக்காரரிடம் லஞ்சம் வாங்கிய காவலர் இடைநீக்கம்

காஷ்மீரில் பிச்சைக்காரரிடம் லஞ்சம் வாங்கிய காவலர் இடைநீக்கம்

1 mins read

ராம்பான்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராம்பன் மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு முதியவரிடம் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் முனவர் உசேன் லஞ்சம் வாங்கியுள்ளார். இது குறித்து புகார் கிடைத்ததன்பேரில் அந்தக் காவலர் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளார். விசாரணையில் அந்தக் காவலர் அப்பகுதியில் உள்ள பிச்சைக்காரர்கள் பலரிடம் மிரட்டி லஞ்சம் வாங்கிய தாகத் தெரிகிறது. நாட்டின் பல இடங்களிலும் இவரைப் போன்ற காவலர்கள் இருக்கவே செய்கின்றனர். இருந்தும் அவர்களைப் பற்றி புகார் கொடுக்க யாரும் முன்வராததால் இந்த அவல நிலை தொடர்வதாகக் கூறப்படுகிறது.