புதுடெல்லி: தெற்காசிய நாடுகளில் வரலாறு காணாத வகையில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருவதால் அந்நாடுகளில் கட்டுக்கடங்காத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இத னால் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மில்லியன் கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் வெள்ளப் பாதிப்புப் பகுதிகளில் சிக்கித் தவிக் கின்றனர். அண்மைய ஆண்டுகளில் காணாத வகையில் தொடர் மழை பெய்து வருவதால் நகர்களின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் வெள்ளத்தில் பறிகொடுத்துவிட்டு பிள்ளை குட்டிகளுடன் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா, நேப்பாளம், பங்ளா தேஷ் போன்ற நாடுகளில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மழை பெய்யத் தொடங்கியது முதல் வெள்ளத்தில் சிக்கிய ஆயிரத் திற்கும் மேற்பட்டோரின் சடலங் கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பீகார் மாநிலத் தில் நேற்று முன்தினம் மீட்கப்பட்ட 39 சடலங்களுடன் இதுவரை 367 சடலங்கள் மீட்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவின் 19 மாநிலங்களில் வெள்ளத்தால் 11 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை யிலும் 450,000 பேர் அரசாங்க முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் பெரிய மாநிலங் களில் ஒன்றான உத்தரப்பிரதேச மாநிலத்தின் நிலப்பரப்பில் பாதிக் குப் பாதி வெள்ளத்தால் பாதிக் கப்பட்டுள்ளது. இங்கு 82 பேர் வெள்ளத்தில் பலியாகியுள்ளனர். அண்டை நாடான நேப்பாளத் தில் வெள்ளத்திற்கு 146 பேர் பலியானதோடு 80,000 வீடுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப் பட்டுள்ளன. மாண்டோர் எண் ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அந்நாட்டின் உள்துறை அமைச்சு அச்சம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் 223 பேரை பலி வாங்கிய மழை, வெள்ளம் இப்போது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. அசாமில் கடந்த நான்கு மாதங்களில் இரண்டாவது முறை யாக ஏற்பட்ட புயல், வெள்ளத்தால் 71 பேர் மாண்டுள்ளனர். இங்கு வாழும் அரிய விலங்கினங்கள் சிலவும் மாண்டதாகக் கூறப்படு கிறது.
இந்தியாவின் மேற்குப் பகுதி யில் உள்ள மாநிலங்களான குஜராத் மற்றும் ராஜஸ்தானில் 350 பேர் மாண்டுள்ளனர். பங்ளாதேஷில் 137 பேரை பலிவாங்கிய மழை, வெள்ளத்தால் 7.5 மில்லியன் பேர் வீடுகளை இழந்து தவிக்கும் நிலை ஏற் பட்டுள்ளது.
அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் கிட்டத்தட்ட 23,000 பள்ளி கள் மூழ்கியுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப் பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஜாய் என்ற தொண்டு நிறுவனம், பார்பேடா மாவட்டத்தில் படகுகள் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகிறது. படம்: இணையம்

