சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்ற வாளிகளில் ஒருவரான பேரறி வாளன் 26 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூர் மத்திய சிறையி லிருந்து முப்பது நாட்களுக்கு பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். பலத்த காவல்துறை பாதுகாப் புடன் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக் கில் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட பேரறிவாளன் இந்நாள் வரை 26 ஆண்டுகள் சிறைவாசம் அனு பவித்து வருகிறார். இந்த நிலையில் அவரது தந்தை டி. ஞானசேகரன் என்ற குயில்தாசனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று பேரறிவாளன் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தார்.
இதையடுத்து பேரறிவாளனை ஒரு மாதம் பரோலில் விடுவிக்க மாநில அரசு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் நகல், வேலூரில் உள்ள மத்திய சிறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட குற்றப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையிலான காவல் துறையினர் இரவு 8.54 மணிக்கு காவல்துறை வாகனத்தில் அவரை பாதுகாப்புடன் ஜோலார்பேட்டைக்கு அழைத்துச் சென்றனர். இதன் மூலம் 26 ஆண்டு களுக்குப் பிறகு முதல் முறையாக சுதந்திர காற்றை அவர் சுவாசித் துள்ளார். பேரறிவாளன் பரோலில் விடு விக்கப்பட்டதால் எதிர்காலத்தில் அவர் சிறையிலிருந்து முழுமை யாக விடுவிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
வேலூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பேரறிவாளன். கோப்புப் படம்

