மதுபானக் கடைகளைத் திறக்க சாலைகளின் பெயர்களை மாற்றும் கேரளா

மதுபானக் கடைகளைத் திறக்க சாலைகளின் பெயர்களை மாற்றும் கேரளா

1 mins read

திருவனந்தபுரம்: மாநில நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றி, கூடுதல் மதுபானக் கடைகளைத் திறக்க கேரள அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தூரத்திலுள்ள மதுக் கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் கேரளாவில் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து மாநில நெடுஞ் சாலைகளை பெயர் மாற்றம் செய்து கூடுதல் கடைகளைத் திறக்க தற்போது கேரள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதால், நகரப் பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைகள் உள்ளாட்சி சாலைகளாக மாற்றப்பட வுள்ளன. இதனால் மதுக்கடைகள், பார்களை திறக்க முடியும்.