பாதுகாப்புத் துறைக்குப் புதிய தேர்ச்சிகள்: தொழில்நுட்பங்கள், சாதனங்கள் அறிமுகம்

பாதுகாப்புத் துறைக்குப் புதிய தேர்ச்சிகள்: தொழில்நுட்பங்கள், சாதனங்கள் அறிமுகம்

1 mins read

தோ பாயோ வீவக மையத்தில் முதல் பாதுகாப்பு தினம் நேற்று நடந்தது. பாதுகாப்புத் தொழில் துறையில் விரும்பிய பலனை தரக்கூடிய ஆளில்லாத விமானம் முதல் மனித இயந்திரம் வரை பலதரப்பட்ட புதுப்புது தொழில்நுட் பங்களும் தேர்ச்சிகளும் அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தன. உள்துறை அமைச்சு, ஸ்கில்ஸ் ஃபியூச்சர் இயக்கம், தேசிய தொழிற்சங்க காங்கிரசின் வேலை நியமன, வேலை தகுதி பயிலகம் ஆகியவற்றின் ஆதரவுடன் சிங்கப் பூர் ஊழியரணி ஏற்பாடு செய்த அந்த முதலாவது பாதுகாப்பு தினம், பாதுகாப்புத் தொழில்துறை, உற்பத்தித்திறன் செயல்திட்ட தொடக்கத்தையொட்டி இடம் பெற்றது. பாதுகாப்பு நிறுவனங்கள் புதுப்புது தொழில்நுட்பங்களை தங்கள் தேவைக்கு ஏற்ப அதிகப் படுத்தி அதன் மூலம் உற்பத்தித் திறனை கூட்டி ஆற்றல்மிக்க, செம்மையான மனிதவளத்தை உருவாக்க உதவுவது இந்தச் செயல்திட்டத்தின் நோக்கம். நேற்றைய நிகழ்ச்சியில் ஐந்து நிறுவனங்கள் புதுப்புது தொழில் நுட்பங்களை காட்சிக்கு இடம்பெற செய்தன. உள்நாட்டு நிறுவனமான 'டு யீ இஞ்ஜினியரிங்' என்ற நிறுவனம் ஆளில்லா சிறு விமானம் ஒன்றை காட்சிக்கு வைத்திருந்தது.