எடப்பாடி பழனிசாமி அரசு பெரும் பான்மை பலத்தை இழந்துவிட்ட தால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என திமுக குரல் எழுப்பிவரும் வேளையில் பாஜக மூத்த தலைவரான சுப்பிர மணியன் சுவாமி ஒரு புதிய கருத்தை வெளியிட்டுள்ளார். திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினும் டிடிவி தினகரனும் இணைந்து அடுத்த சில நாட்க ளில் கூட்டணி ஆட்சியை அமைப் பார்கள் என்று டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, திருப்பரங்குன் றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸ் நேற்று தினகரன் அணிக்கு தாவியதைத் தொடர்ந்து அந்த அணி எம்எல்ஏக்களின் பலம் 22ஆக அதிகரித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி அரசு ஒவ் வொரு நாளும் பலவீனம் அடைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவை திமுக கூட்டணித் தலைவர்கள் நேற்று சந்தித்துப் பேசினர். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் நேற்று சென்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளப்போவதாக தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 19 பேர் ஏற்கெனவே ஆளுநரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர். அதனால் இப்போதைய அரசு சிறுபான்மை அரசாக மாறிவிட்டது என்றும் சட்டமன்றத்தை உடனே கூட்டி பெரும்பான்மையை நிரூ பிக்க முதல்வர் பழனிசாமிக்கு உத் தரவிட வேண்டும் என்றும் நேற்று திமுக கூட்டணித் தலைவர்கள் ஆளுநரிடம் வலியுறுத்தினர். ஆளுநரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார்.

