பாலியல் பலாத்கார குற்றத்துக்கான தண்டனை இன்று அறிவிப்பு; ராணுவத்தின் பிடியில் பல்லாயிரம் பேர்

பாலியல் பலாத்கார குற்றத்துக்கான தண்டனை இன்று அறிவிப்பு; ராணுவத்தின் பிடியில் பல்லாயிரம் பேர்

1 mins read

ஆன்மீக குரு என்று தம்மைத் தாமே கூறிக்கொண்ட குர்மீத் ராம் ரஹிம் சிங் பாலியல் பலாத்கார குற்றவாளி என்று கடந்த வெள்ளிக்கிழமை வடஇந்தியாவின் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் அந்தக் குற்றத்துக்கான தண்டனை இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் சிங்கிற்கு தண்டனை அறி விக்கப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக் கின்றன. அதனைத் தொடர்ந்து சிர்சா நகரின் ஆன்மீக தலைமையகத்திற்குள் பதுங்கி இருக்கும் ஆயிரக்கணக்கானோர் மீண்டும் வன்முறையில் இறங்கிவிடாதபடி ராணுவம் சுற்றிவளைத்துள்ளது.

கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ள அந்த தலைமை யகத்தினுள் இருப்போரை அமைதியாக சரணடைந்துவிடுமாறு ராணுவமும் போலிசும் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகின்றன. தண்டனை அறிவிக்கப்பட இருப்பதால் சிர்சா, பஞ்ச்குலா நகர்களில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சிங் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டபோது அவரைக் கைது செய்ய வந்த பஞ்ச்குலா போலிசாரைத் தடுத்த குற்றத்திற்காக ஏழு போலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள் ளனர். சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த 'இஸட் பிளஸ்' பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அந்த ஏழு பேரும் விசாரணைக் காவலில் வைக்கப் பட்டுள்ளதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நேற்று தெரிவித்தது.