'தேரா சச்சா சௌதா' என்னும் ஆன்மீக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் ஆதரவாளர்கள் ஹரியானாவில் கண்மூடித்தனமான வன்முறை யில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர்களைக் கண்டிக்கும் வண் ணம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று சூடான கருத்து களை வெளியிட்டார். சமய நம்பிக்கையின் பெயரால் சட்ட ஒழுங்கை மீற எவருக்கும் உரிமை இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் 'மான் கி பாத்' (மனதின் குரல்) என்னும் தலைப்பில் வானொலியில் மோடி உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். நேற்றைய வானொலி உரை யில், "சமய நம்பிக்கை என்ற பெயரில் நடத்தப்படும் வன்முறை யை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. "சமய நம்பிக்கை தனிநபர், அரசியல் அமைப்பு, சமூகம், கலாசாரம் என்ற எந்த அடிப்படை யில் இருந்தாலும் அதன் பெயரில் நடத்தப்படும் வன்முறையை அனு மதிக்க முடியாது. "சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வோரையும் வன் முறையைத் தூண்டுவோரையும் அரசாங்கம் சும்மாவிடாது. சட்டம் தனது கடமையைச் செய்யும். குற்றவாளிகள் தண்டிக்கப்படு வார்கள்.
வன்முறையில் ஈடுபடுவோரை சும்மா விடமாட்டோம்: மோடி கடும் எச்சரிக்கை
1 mins read

