பாஜகவுக்கு உதவும் ஆட்சி தமிழகத்தில் நீடிப்பது ஆபத்து: முத்தரசன் எச்சரிக்கை

பாஜகவுக்கு உதவும் ஆட்சி தமிழகத்தில் நீடிப்பது ஆபத்து: முத்தரசன் எச்சரிக்கை

2 mins read
afe8bcff-ef87-4326-9b8c-e19251f97d3a
-

திருவாரூர்: அதிமுகவின் எல்லா அணிகளையுமே யாரோ பின்னா லிருந்து இயக்குவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ள குடிமராமத்துப் பணிகளில் பல்வேறு முறைகேடு கள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட் டினார். இந்த முறைகேடுகள் தொடர் பாக வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும் என வலியுறுத்திய அவர், பாஜகவுக்கு உதவும் ஆட்சி தமிழகத்தில் நீடிப்பது ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கை விடுத்தார். "முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 11 எம்எல்ஏக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கொறடா உத்தரவை மீறி நடப்பு அதிமுக அரசை எதிர்த்து வாக்க ளித்தனர்.

அப்போது, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. "அப்போது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாத முதல்வர் எடப் பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு தற்போது 19 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி மிரட்டுகிறது. ஏற்கெனவே 1989ல் அதிமுக பிளவுபட்டு பின்னர் ஒன்றுசேர்ந்தபோது, அதிலிருந்த தலைவர்கள் சுயமாக சிந்தித்தனர். ஆனால், தற்போது அனைத்து அணிகளிலும் உள்ள அதிமுகவினரை யாரோ பின்னிருந்து இயக்குகின்றனர்," என்றார் முத்தரசன். தமிழக நலனுக்கு எதிரான மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் காலஞ்சென்ற ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த தாகக் குறிப்பிட்ட அவர், தற்போது பழனிசாமி அரசு, ஜெயலலிதா எதிர்த்த அனைத்துத் திட்டங்களை யும் ஆதரித்து வருவதாகச் சுட்டிக்காட்டினார்.

மத்திய பாஜக அரசுக்கு தற்போதைய அதிமுக அரசு ஒத்துழைப்பு கொடுத்து வருவதா கவும் முத்தரசன் சாடினார். இத்தகைய ஓர் அரசு தமிழகத்தில் நீடிப்பது மாநிலத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றார் அவர். "முதல்வர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லை என 19 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துவிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மேலும் 2 எம்எல்ஏக்கள் கருத்து தெரிவித்துள்ளதால், இந்த அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. எனவே, உடனடி யாக சட்டசபையைக் கூட்டி பெரும் பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். "இல்லையெனில் உடனடியாக இந்த அரசைப் பதவி விலகச் செய்ய வேண்டும். இதுகுறித்து செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார இயக்கத்தில் மக்களிடம் கொண்டு செல்வோம்," என்று முத்தரசன் மேலும் தெரிவித்தார்.