முற்றுகையைக் கைவிட சீனா மறுப்பு

முற்றுகையைக் கைவிட சீனா மறுப்பு

1 mins read

சிக்கிம் எல்லையில் கடந்த ஜூன் மாதம் முதல் நீடித்து வரும் ராணுவ முற்றுகையை விலக்கிக்கொள்வது என இந்தி யாவும் சீனாவும் முடிவெடுத்து இருப்பதாக இந்தியா தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. டோக்லாம் முற்றுகையைக் கைவிட்டு எல்லைப் பகுதியி லிருந்து இரு நாட்டு ராணுவப் படைகளும் உடனடியாக வெளி யேற இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் காலையில் தெரி வித்தார். ஆனால், அந்தத் தக வல் வெளியான சிறிது நேரத் தில் சீன வெளியுறவு அமைச்சு முற்றிலும் மாறுபட்ட அறிவிப்பை வெளியிட்டது. எல்லையிலிருந்து படை களை மீட்டுக்கொள்ள இந்தியா ஒப்புக்கொண்டு இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இருந்தபோதிலும் சீன ராணுவம் அந்தப் பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடும் என்று அது குறிப்பிட்டது. சீனா தனது அர சுரிமையைக் காக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடும் என்று சீன வெளியுறவு அமைச்சு கூறி யதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.