தமிழகத்தில் அதிமுகவின் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு துருவங்களாக இருந்த எடப் பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர் செல்வமும் ஒன்றிணைந்த பின்னர் நேற்று முதல்முறையாக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப் பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவ லகத்தில் நடந்த இக்கூட்டம் வி.கே- .சசிகலாவை அதிமுகவிலிருந்து ஒரேயடியாக நீக்குவதற்காக ஏற் பாடு செய்யப்பட்டது என ஊட கங்கள் பரபரப்பைக் கிளப்பிவிட்டி ருந்தன. ஆனால், ஓபிஎஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட நான்கு தீர்மானங் களில் சசிகலா தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக, பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கு வது குறித்து தீர்மானத்தின் எந்த இடத்திலும் வார்த்தையோ வரியோ இடம்பெறவில்லை.
மறைந்த ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகளை கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்க வோ புதிதாக எவரையும் நியமனம் செய்யவோ டிடிவி தினகரனுக்கு உரிமையும் தகுதியும் கிடையாது என்பது முதல் தீர்மானம். ஜெயலலிதாவின் புகழ்பாடும் அமைப்புகளாக டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேடும் ஜெயா தொலைக்காட்சியும் செயல்படுவதை உறுதிப்படுத்த அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள் வது. அதிமுக நிர்வாகிகள், உறுப்பி னர்கள் ஆகியோரின் வேண்டு கோளை ஏற்று கட்சியின் செயற் குழுவும் பொதுக்குழுவும் உடனடி யாகக் கூட்டப்படும். சென்னை அதிமுக தலைமையகத்துக்கு வெளியே சசிகலா படத்தைக் கொளுத்திய அதிமுகவினர். படம்: சதீஷ்

