பாலியல் வன்முறைக் குற்றத் திற்காக தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு நேற்று பத்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தாம் திட்டமிட்டு பாலியல் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட தாக ரஹிம் சிங் கூறினார். தண்டனை அறிவிக்கப்படு வதற்கு முன்னதாக வாதம் நடைபெற்றபோது தம்மை மன் னித்துவிடுமாறு அவர் கண்ணீர் மல்க நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். தமது ஆசிரமத்தில் தங்கி இருந்து ஒரு சிறுமி உள்ளிட்ட இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக ரஹிம் சிங் மீது கடந்த 2002ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிவில் ரஹிம் சிங் குற்றவாளி என்று பஞ்ச் குலா சிபிஐ நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இதையடுத்து, அவர் ஹரி யானா மாநிலம் ரோத்தக் நகரில் உள்ள சோனாரியா சிறையில் அடைக்கப்பட்டார். பாலியல் வன்முறைக் குற்ற வாளி என்று ரஹிம் சிங் அறி விக்கப்பட்டதைப் பொறுத்துக் கொள்ளாத அவரது ஆதர வாளர்கள் வன்முறையில் இறங் கினர். வாகனங்களுக்கு தீ வைத்து அவர்கள் தங்களது எதிர்ப்பைக் காட்டினர். ரயில்கள், பேருந்து கள், அரசு அலுவலகங்கள் போன்றவை தீயிட்டுக் கொளுத் தப்பட்டன. வன்முறை கட்டுக் கடங்காது சென்றதால் துணை ராணுவப் படையினரும் போலி சாரும் துப்பாக்கிச் சூடு நடத் தினர். அதில் பெண்கள் உள் ளிட்ட 38 பேர் மாண்டனர். 250க்கு மேற்பட்டோர் காய மடைந்தனர்.
குர்மீத் ராம் ரஹிம் சிங். படம்: இந்திய ஊடகம்

