அரசாங்க முதலீட்டு நிறுவனமான 'ஜிஐசி', இந்தியாவின் முன்னணி சொத்து மேம்பாட்டு நிறுவனத்துடனான கூட்டுத் தொழிலில் 1.9 பில்லியன் வெள்ளியை முதலீடு செய்துள்ளது. 'டிஎல்எஃப் சைபர் சிட்டி டெவலப்பர்ஸ் எனும் அந்த இந்திய சொத்து நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் சில்லறை விற்பனைக் கடைகளையும் அலுவலக சொத்துகளையும் நிர்வகித்து வருகிறது. இந்த முதலீட்டின் மூலம் இந்திய சொத்துச்சந்தையில் இதுவரை இல்லாத ஆகப்பெரிய பங்கை ஜிஐசி கொண் டிருக்கும். "டிஎல்எஃப் சைபர் சிட்டி டெவலப்பர்சின் டிஎல்எஃப் பிரிவுடன் (டிசிசிடில்) செய்துகொண்ட ஒப்பந்தம் அதன் நிலையான நீண்டகால வளர்ச்சிக்கும் வாடகை வருமானத் தின் மூலம் ஆதாயம் அடையவும் வழி வகுக்கும்," என்று 'ஜிஐசி' அறிக்கை குறிப்பிட்டது. 'டிசிசிடில்' நிறுவனத்துக்கு புதுடெல்லி உட்பட முக்கிய நகரங்களில் 26.9 மில்லியன் சதுர அடி சொத்துகள் உள்ளன. மேலும் 2.5 மில்லியன் சதுர அடி சொத்துகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மேலும் 19 மில்லியன் சதுர அடி பரப்பளவுள்ள சொத்துகள் உருவாகும்.
இந்திய சொத்து நிறுவனத்தில் ஜிஐசி $1.9 பில்லியன் முதலீடு
1 mins read

