சேலம்: அரசியல் குறித்து யாரிடம் வேண்டுமானாலும் பேச தாம் தயாராக இருப்ப தாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், முதல்வர் பதவி என்பது ஒருசிலருக்கு மட்டும் தான் தானாகக் கிடைக்கும் என்றும், கடுமையான உழைப்பால் மட்டுமே ஒருவர் முதல்வராக முடியும் என்றும் கூறினார். ஜெயலலிதா இருந்த போது நடிகர்கள் கமலும் ரஜினியும் வாய்திறக்க வில்லை என்று சுட்டிக் காட்டிய அவர், ஜெயலலிதா காலமான நிலையில், இருவரும் அரசியல் குறித்து கருத்துரைப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். "ரஜினியும் கமலும் தமிழக மக்களுக்காக எதையும் செய்யவில்லை. அரசியல் குடும்பத்தில் இருந்த வந்த எனக்கு, தமிழக முதல்வர் ஆகும் தகுதி உள்ளது. "ரஜினியும் கமலும் எனக்கு மிகவும் வேண்டப் பட்டவர்கள். கலையுலகத் தினரை நான் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை," என்றார் சரத்குமார். நடிகர் கமலின் டிவிட்டர் பதிவுகளைப் படித்து மக்கள் திசைதிரும்பி விடக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், கமல்ஹாசனின் பதிவுக ளுக்கு தெளிவுரை எழுத தாம் தயாராக இருப்பதாகக் கூறினார். கமல், ரஜினி குறித்து சக நடிகர் சரத்குமார் இவ் வாறு விமர்சித்திருப்பது பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா இருந்தபோது கமலும் ரஜினியும் ஏன் வாய்திறக்கவில்லை: சரத்குமார்
1 mins read

