சென்னை: சென்னையில் குண்டர்கள் நடமாட்டம் திடீரென அதிகரித்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மாநகரில் உள்ள தங்குவிடுதிகளில் போலிசார் சோதனை மேற்கொண்டனர். அரசியல் காரணங்களை முன்வைத்து இந்தக் குண்டர்கள் கலவரம் ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் உளவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலிசார் உஷார்படுத்தப் பட்டுள்ளனர். மேலும் பதற்றமான பகுதிகளில் ரகசிய கண்காணிப்புப் பணியும் தீவிரமடைந்துள்ளது. விடுதிகளில் தங்கியிருப்போர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் குண்டர்கள் நடமாட்டம்
1 mins read
-

