தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த 35 வயதான மீரான் தம்பி என்பவர் நேற்று முன்தினம் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தனியார் பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவரது இருக்கைக்கு பின்புறம் அமர்ந்திருந்த இரு இளையர் கள் மது போதையில் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் மீரான் தம்பி மீது வாந்தி எடுக்க, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சக பயணிகள் சமாதானப்படுத்தினர். இரவு உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்டபோது, மீரான்தம்பி சிறுநீர் கழிக்க மறைவிடம் சென்றபோது, பின்தொடர்ந்த இளையர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.
வாந்தி எடுத்ததை தட்டிக் கேட்டவர் கத்தியால் குத்திப் படுகொலை
1 mins read

