மலைக்க வைத்த மாமனிதர்: 27 ஆண்டுகள் தனியொருவனாகப் போராடி குளம் வெட்டி சாதனை

மலைக்க வைத்த மாமனிதர்: 27 ஆண்டுகள் தனியொருவனாகப் போராடி குளம் வெட்டி சாதனை

2 mins read
aa3fca9f-dedd-44ca-af0d-105b93d75bde
-

இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலம், கோரியா மாவட்டத்தில் இருக்கும் சஜா பகாட் எனும் சிற்றூரில் வசிக்கும் மக்கள், இதுநாள் வரை தங்களுக்கும் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கும் போதிய நீர் ஆதாரமின்றித் திண்டாடி வந்த னர். அந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு என அவர்களுக்குத் தெரிய வில்லை. அரசாங்கமும் எதுவும் செய்யவில்லை. ஆனால், அப்போது 15 வயதாக இருந்த ‌ஷியாம் லால் வேறுவிதமாக சிந்தித்தார். தன்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் மண்வெட்டி யைக் கையில் பிடித்த அவர், தனி ஆளாக குளம் வெட்டும் முயற்சி யில் இறங்கினார். அதைக் கண்டு ஊரார் சிரித்தனர். ஆனாலும் ‌ஷியாமின் மனஉறுதி குன்றவில்லை. 27 ஆண்டுகளாகப் போராடி ஒரு ஏக்கர் பரப்பளவில், 15 அடி ஆழம் கொண்ட குளத்தை அவர் உருவாக்கினார்.

"அரசாங்கமும் சரி, ஊராரும் சரி, யாருமே இந்தப் பணியில் எனக்கு உதவவில்லை," என்று பெருமிதத்துடன் கூறிய 42 வயது ‌ஷியாம், ஊர் மக்களின், கால்நடை களின் நலனுக்காகவே அந்தக் குளத்தைத் தாம் வெட்டியதாகக் குறிப்பிட்டார். மின்சாரமும் முறையான சாலை வசதிகளும் இல்லாத நிலையில், சஜா பகாட்வாசிகள் தங்களின் நீர்த் தேவைகளுக்கு இரு கிணறு களை மட்டுமே நம்பியிருந்தனர். முன்பு ‌ஷியாமை ஏளனம் செய்த அவர்கள் இப்போது அவரைக் கொண்டாடுகின்றனர். "‌ஷியாம் வெட்டிய குளத்தில் நீர் நிரம்பியிருக்கிறது. இப்போது அதைத்தான் எல்லாரும் பயன்படுத் துகிறோம். நாங்கள் அனைவரும் அவருக்கு நன்றிக்கடன்பட்டுள் ளோம்," என்றார் ஓர் உள்ளூர்வாசி. ‌ஷியாமின் அரும்பணியைக் கேள்விப்பட்ட மகேந்திரகர் தொகுதி எம்எல்ஏ, நேரில் சென்று அந்தக் குளத்தைப் பார்வையிட்டதுடன் ‌ஷியாமுக்கு 10,000 ரூபாய் வெகு மதியும் அளித்தார்.