அதிமுக கூட்டத்தைப் புறக்கணித்த மேலும் 27 எம்எல்ஏக்கள்; முதல்வர் எடப்பாடி அதிர்ச்சி

அதிமுக கூட்டத்தைப் புறக்கணித்த மேலும் 27 எம்எல்ஏக்கள்; முதல்வர் எடப்பாடி அதிர்ச்சி

2 mins read
48ae1665-f294-4a47-8031-0d5ff19df67f
-

சசிகலாவையும் அவருடைய சகோதரி மகனான டிடிவி தினகரனையும் அதிமுகவில் இருந்து நீக்குவது குறித்து முடிவெடுப்ப தற்காக நேற்று முன்தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே 21 எம்எல்ஏக்கள் தினகரன் பக்கம் சென்றுவிட்ட நிலையில், மேலும் சிலர் அந்த அணிக்குத் தாவக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதை உறு திப்படுத்தும்விதமாக, அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மேலும் குறைந்தபட்சம் 27 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை என 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி கூறுகிறது. இதையடுத்து, அடுத்த மாதம் 12ஆம் தேதி அதிமுக பொதுக் குழுவும் செயற்குழுவும் கூடி, பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவையும் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தினகரனையும் நீக்குவது தொடர்பில் முடிவெடுக்க இருப் பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடந்த கூட்டத்திற்கு தினகரனை ஆத ரிக்கும் 21 எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால், மீதமுள்ள எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் பக்கம்தான் என்று நம்பி வந்த நிலையில், அவர்களில் 27 பேர் கூட்டத்தைப் புறக்கணித்தது கண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கூட்டத்தில் 112 முதல் 117 எம்எல்ஏக்கள் வரை பங்கேற்றதாக மூத்த தலைவர் களில் ஒவ்வொருவரும் முரண் பட்ட தகவல்களைத் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே, முதல்வர் எடப் பாடி பழனிசாமியின் தீவிர ஆதர வாளராகக் கருதப்படும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கருப் பண்ணன் அண்மையில் இரண்டு முறை தினகரனை நேரில் சந்தித் ததாகவும் அவருடன் தொலை பேசித் தொடர்பில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, முதல்வர் எடப் பாடி அவரை நேரில் அழைத்துக் கண்டித்ததாகவும் சொல்லப்படு கிறது.