சிறையில் இருப்பது போன்ற சூழலே நிலவுகிறது: கௌதமன் வருத்தம்

சிறையில் இருப்பது போன்ற சூழலே நிலவுகிறது: கௌதமன் வருத்தம்

1 mins read

தூத்துக்குடி: பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல் வழங்கப்பட்டிருந்தாலும் எப்போதும் போலிசார் அவரைச் சுற்றிச் சூழ்ந்தே இருப்பதாகத் திரைப்பட இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார். இதனால் பேரறிவாளன் இன்னும் சிறைக்குள் இருப்பது போன்ற சூழலே நிலவுவதாக அவர் கூறியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். "நெடுவாசல், கதிராமங்கலம், நீட் தேர்வு என தமிழக மக்களின் வாழ்வாதாரமும் உரிமைகளும் பாதிக்கப்பட்டதற்கு மத்திய பாஜக அரசுதான் முழுக்காரணம். தர்ம யுத்தம், ஊழல் ஆட்சி என்றெல்லாம் மாறி மாறி பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்தது அவரவர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற் காக மட்டும்தான்," என்று கௌதமன் மேலும் சாடினார்.