மத்திய அரசு தமிழர்களின் வாழ்வாதாரத்தினைத் சுரண்டுகிறது: சீமான்

மத்திய அரசு தமிழர்களின் வாழ்வாதாரத்தினைத் சுரண்டுகிறது: சீமான்

1 mins read
94f395cc-407e-4399-9f5f-256a35940176
-

திருவாரூர்: தமிழின மக்களுக்கு கடந்த கால காயமோ, எதிர்கால கனவோ இல்லை என்றும் வெறும் நிகழ்காலத் தேவை மட்டுமே உள் ளது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அதனால்தான் தமிழர்கள் வாக்குக்கு விலை போவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த நிலை மாறிட வேண்டும் என்று கூறி உள்ளார். "தமிழகத்தின் ஆட்சியில் அமர்ந்த கட்சிகள் எல்லாம் நமது இயற்கை வளத்தைக் கொள்ளை யடிப்போருக்கு வழங்கிவிட்டன. நாட்டின் 32 ஆறுகளையும் விற்றுத் தின்றுவிட்டார்கள். இப்போதுள்ள குடிநீர் பஞ்சத்துக்குக் காரணம் யார்? வறட்சிக்கு காரணம் ஆட்சி யாளர்கள் மட்டுமே," என்றார் சீமான்.

நன்னிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், தமிழர்களுக்குத் தேவை அரசியல் விடுதலை என்றார். "தமிழர்கள் மற்ற இனத்தவர் போல தலைநிமிர்ந்து வாழவேண் டும் என்றால் ஆட்சி அதிகாரத் தைக் கைப்பற்றவேண்டும். அப்போதுதான் தமிழர்கள் விடுதலை பெற்றவர்களாகத் தாய் நாட்டில் வாழமுடியும்.

மத்திய அரசு தமிழர்களின் வாழ்வாதாரத்தினைத் சுரண்டுவதா கவும் அவர் சாடினார்.