தமிழகத்தில் மருத்துவம் படிக்க பிற மாநில மாணவர்கள் முறைகேடு

தமிழகத்தில் மருத்துவம் படிக்க பிற மாநில மாணவர்கள் முறைகேடு

2 mins read

சென்னை: வெளிமாநிலங்களைச் சேர்ந்த பலர் போலி இருப்பிடச் சான்று அளித்து தமிழக மருத் துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க இடம் பெற்றது பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. மருத்துவ கலந்தாய்வில் இது வரை குறைந்தபட்சம் 150 பேர் போலிச் சான்றிதழ் அளித்து மருத் துவப் படிப்புக்கான தர வரிசையில் இடம்பெற்று கலந்தாய்வில் பங் கேற்றது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வு விவ காரத்தால் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள இயலாமல் கடும் ஏமாற்றத்தில் உள்ள தமிழக மாண வர்கள் இந்தப் புதிய விவகாரத்தால் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். நீட் தேர்வு அடிப்படையிலான மாணவர் சேர்க்கையில் இந்தியா வில் எங்கு இருந்தாலும் தமிழகத் தில் 5 ஆண்டுகள் படித்திருந்த தற்கான இருப்பிடச் சான்றிதழ் அளித்தால் அவர்கள் தரவரிசை யில் இடம்பெற்று கலந்தாய்வில் பங்கேற்று அரசு ஒதுக்கீட்டு இடத்தைப் பெற முடியும். இச்சலு கையை பயன்படுத்தி கேரளாவைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள் தமிழகத்திலும் இருப்பிடச் சான் றிதழ் பெற்று கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து இவர்களில் நான்கு பேருக்குத் தமிழக மருத் துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. எனினும் பின்னர் இவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் அளித்தது அம்பலமானது. இதையடுத்து இருப்பிடச் சான் றிதழ் சரிபார்ப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டபோது 150க்கும் மேற்பட்ட வெளிமாநில மாணவர் கள் இவ்வாறு போலி இருப்பிடச் சான்றிதழ் அளித்து இரு மாநி லங்களில் மருத்துவக் கலந்தாய் வில் பங்கேற்றதும் அம்பலமானது. இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட இருப்ப தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.