சென்னை: ஓ.பன்னீர்செல்வத்துக்குத் துணை முதல்வராக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தது செல்லாது என இளங்கோவன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. கடந்த 21ஆம் தேதி அதிமுகவின் இரு அணிகள் இணைந்ததை அடுத்து துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
ஓபிஎஸ் துணை முதல்வரானதை எதிர்த்து வழக்குத் தாக்கல்
1 mins read

