கோலாலம்பூர்: மலேசியாவில் எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலில், பாஸ் கட்சியுடன் ஒத்துழைக்கப் போவதில்லை என பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் 4 உறுப்புக்கட்சி களும் முடிவெடுத்துள்ளன. நேற்று சுமார் 4 மணி நேரம் நடந்த பக்காத்தான் - பாஸ் பேச்சு வார்த்தைக்குப் பிறகு பக்காத்தான் ஹராப்பானின் தலைமை இந்த முடிவை வெளியிட்டுள்ளது. மேலும், தேர்தலில் பாஸ், தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுடன் மும்முனைப் போட்டியினைச் சமாளிக்கும் உத்திகளைக் கண்டறியும் பணி களையும் முடுக்கிவிட்டுள்ளதாக அது அறிவித்துள்ளது. மாநிலத் தலைவர்களை நியமிக்கும் பிரச்சினைக்கும் தீர்வு கண்டுவிட்டதாக பக்காத்தான் கூட்டணியின் தலைவர் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார். ரபிஸி ரம்லி உட்பட, பக்காத்தானின் உயர்மட்டத் தலைவர்கள் பலர் கலந்து கொண்ட அச்சந்திப்பில் சிலாங்கூர் முதல்வர் அஸ்மின் அலி கலந்து கொள்ளவில்லை. பக்காத்தானின் துணைத் தலைவர் சலாஹுடின் அயூப் இதனை நல்லதொரு செய்தி என்றும் உறுதியான ஒரு முடிவு என்றும் வர்ணித்துள்ளார்.
பக்காத்தான் - பாஸ் ஒத்துழைப்பு இல்லை
1 mins read

