சென்னை: முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வமும் அதிமுகவை சின்னபின்னமாக்கி விட்டதாக நடிகரும் தினகரனின் ஆதரவாள ருமான செந்தில் சாடி உள்ளார். அதிமுக அம்மா அணியின் அமைப்புச் செயலராக நியமிக்கப்பட் டுள்ள அவர், செய்தி யாளர்களிடம் பேசுகையில் பதவியும் பணமும் பெறுவ தற்குத்தான் தர்ம யுத்தமா எனக் கேள்வி எழுப்பினார். "முதல்வர் பழனிசாமி யிடம் ஒரு கூட்டமும், ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒரு கூட்டமும் என சகுனிகள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அதிமுகவை 'கோமா' நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். எப்படி இருந்த கட்சி, இந்த நிலைக்கு வந்துவிட்டது. "எனவே ஒரு நல்ல மருத்துவரைப் பார்க்க வேண்டும். அனைவரும் ஒன்றாகச் சேர வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசையுமாகும். "கட்சியைக் காப்பாற்றும் மருத்துவர் என்றால் அது தினகரன்தான்," என்றார் நடிகர் செந்தில். அதிமுக எனும் இயக்கம் நூறு ஆண்டுகள் இருக்கும் என்று காலஞ்சென்ற ஜெயலலிதா கூறி இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், தினகரனைப் போன்றவர்கள் இருப்பதால் அதிமுக இயக்கம் நூறு ஆண்டுகள் நிச்சயமாக நிலைத்து நிற்கும் என்பது உறுதி என்றார்.
பணத்துக்கும் பதவிக்கும்தான் தர்ம யுத்தம்: சாடும் செந்தில்
1 mins read
-

