சென்னை: தங்களை ஆதரிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிக்கும் என டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ (படம்) தெரிவித்துள்ளார். தங்கள் தரப்பில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்றும் செய்தியா ளர்களிடம் அவர் கூறினார். "கட்சியை வழிநடத்தும் துணைப் பொதுச்செயலர் விடுக் கும் ஆணைகளை ஏற்று, பொறுப் பாளர்கள் வேலை செய்கிறோம். ஓராண்டு காலத்தில் எங்கேயாவது பொதுக்கூட்டம் போட்டிருக்கிறார் களா? மேலூரில் துணை பொதுச் செயலர் தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தினோம். "லட்சக்கணக்கான பேர் அங்கு திரண்டு வந்தார்கள். அந்த தாக் கம்தான் கட்சி. அதைத்தான் வளர்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால் விட்டுவிட வேண்டியதுதானே?" என்றார் தங்க தமிழ்ச்செல்வன்.
தங்க தமிழ்ச்செல்வன்: 40 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கும்
1 mins read
-

