ராஜ்நாத்: ஆட்சியைக் கலைக்க மாட்டோம்

ராஜ்நாத்: ஆட்சியைக் கலைக்க மாட்டோம்

1 mins read
d2a55298-44ee-4c6c-8a1e-852df59d893e
-

டெல்லியில் முகாமிட்டுள்ள அதிமுக பிரமுகர்கள் புதுடெல்லி: தமிழகத்தில் ஆட் சியைக் கலைப்பதற்கான முகாந் திரம் ஏதுமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் அவரை தமிழக அமைச்சர்கள் சந்தித்துப் பேசி யுள்ள நிலையில், அமைச்சரின் இந்தத் திட்டவட்ட அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் தற்போது நடப்பது உட்கட்சிப் பூசல் என்றும் இது தொடர்பாக ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள இய லாது என்றும் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். இதற்கிடையே அதிமுகவின் பிரமுகர்கள் தற்போது டெல்லியில் முகாமிட்டு அடுத்தகட்ட நடவடிக் கைகளைத் திட்டமிட்டு வருகின்ற னர். முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் ஒருபுறமும் தினகரன் ஆதரவாளர்கள் மறுபுறமும் பல்வேறு வகையிலும் காய்களை நகர்த்தி வருகின்றனர்.