திண்டிவனம்: இயற்கை விவசா யத்தை வலியுறுத்தி வரும் திரைப் பட நடிகர் ஆரி, தற்போது நாட்டு விதைகளின் முக்கியத்துவத்தை மக்கள் உணர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் உலக சாதனை படைக்கும் நோக்கத்துட னும் பாரம்பரியமான நாட்டு விதை களின் மகத்துவத்தை உணர்த்தும் வகையிலும் அவரது ஏற்பாட்டில் 'நானும் ஒரு விவசாயி' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டிவனம் அருகே நடை பெற்ற இந்நிகழ்வின்போது தனி யார் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 2,683 பேர் பங் கேற்று 3 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரே நிமிடத்தில் 5,366 நாட்டுக் கத்தரிச் செடிகளை நட்டனர். இதையடுத்து செய்தியாளர் களிடம் பேசிய நடிகர் ஆரி, "இதே போன்ற நிகழ்வை சீன அரசு 2,017 பேரை வைத்து நடத்தியது. அதை நாம் முறியடித்துள்ளோம். மக்களிடமும் மாணவர்களிடமும் 'நானும் ஒரு விவசாயி' என்ற விழிப்புணர்வை ஊட்டியுள்ளோம்," என்றார்.
ஒரே நிமிடத்தில் நடப்பட்ட 5,366 நாட்டு கத்திரிச் செடிகள்
1 mins read

