மும்பை: மும்பை நகரில் திங்கட் கிழமை பெய்யத் தொடங்கிய கன மழை முதல் நேற்று காலை வரை நீடித்தது. மும்பையின் நவிமும்பை, தானே ஆகிய பகுதிகளில் சாலை களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மும்பை நகரமே வெள்ளக் காடாய்க் காட்சி அளித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சாலை, ரயில் மற்றும் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. லோவர் பரேல், தாதர், குர்லா, அந்தேரி, சாட் கோபா, காசர் மேற்கு, சையன், ஆகிய பகுதிகளில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு விரைவு நெடுஞ் சாலைகளில் பகுதிகளில் இடுப்பள வுக்குத் தண்ணீர் தேங்கியது. இதனால் அங்கு ஆயிரக்கணக் கான வாகனங்கள் சிக்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்றிரவு சாலைகளில் வெள்ள நீர் வடிந்து போக்குவரத்து ஓரள வுக்கு இயல்பு நிலைக்குத் திரும் பியதாகக் கூறப்படுகிறது. படம்: ஏஎஃப்பி
வெள்ளத்தால் முடங்கியது மும்பை
1 mins read
-

